- 16 January 2015
- Adtergere342342qaFAASRGFA
- 0
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் – பாரதி தமிழ்ச்சங்கத்தின் மேல் அவதூறு – தன்னிலை விளக்கம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வலைப்பக்கத்தில் பாரதி தமிழ்ச்சங்கத்தின் மேல் அவதூறு பொழிந்திருக்கும் அரவிந்தன் கன்னையன் என்பவரது வசைக்கடிதத்துக்கு பதில் அளிக்கும்பொருட்டு பாரதி தமிழ்ச்சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள நான் இந்த மடலை எழுதுகிறேன்.
தமிழின் இலக்கிய வரலாறு தொடங்கிய நாள்முதலாக இன்றுவரை தமிழ் மொழியும் இந்து மரபும் பிரிக்கவியலாது ஒன்றுடனொன்று பிணைந்தே வளர்ந்திருக்கின்றன. சிவன் உடுக்கையில் ஒருபுற ஒலி சங்கதமாகவும் மறுபுற ஒலி தமிழாகவும் உயிர்த்தெழுந்து வந்தது என்பது பாரத அளவில் இந்து ஆன்மீகத்தை ஒன்றிணைத்து நோக்கும் நம்பிக்கையின் குறியீடு. சங்கத்தமிழ் மண்ணுக்கும் இலக்கியத்துக்கும் இந்திரனும், திருமாலும், வருணனும், முருகனும், காளியும் நாயகர்கள். நாயன்மார்களால் அரவணைக்கப்பட்டு ஆழ்வார்களால் ஆதரிக்கப்பட்டு சித்தர்களால் செம்மையுற்று வளர்ந்த மொழி தமிழ் மொழி. இந்து தர்மம் தமிழ் வளர்த்தது; தமிழ், இந்து தர்மத்தை வளர்த்தது. இது தமிழ் மொழியின், தமிழ் கலாசாரத்தின் தொல் வரலாறு. அரவிந்தன் கன்னையன் என்பவர், அவருக்கே உரிய இந்துக்காழ்ப்பின் விளைவாக இந்து மரபார்ந்த அம்சங்கள் வடிகட்டப்பட்ட ஒரு மொழியை மட்டுமே தமிழென்று கருதலாம். நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை.
பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது. பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமாக தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை அது காண்கிறது. பாரதி தமிழ்ச்சங்கம் இந்து கலாசார அமைப்பு என்பதை தெளிவாகவே அறிவிக்கிறது. ”பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு” என்பது பாரதி தமிழ்ச்சங்க வலைத்தள முகப்பில் காணப்படும் வாசகம். இதை பெருமையுடன் அறிவித்தே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தொடங்குகிறோம். எனவே பாரதி தமிழ்ச்சங்கம் இந்து அடையாளத்தை மறைத்து இயங்குவது போல் அரவிந்தன் எழுதியிருப்பது வெறுப்பின் அடிப்படையில் எழுந்த முட்டாள்தன எழுத்து.
பாரதி தமிழ்ச்சங்கத்தின் நோக்கங்கள் வலைத்தளத்தில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன
· பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
· பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.
· உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது.
· பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் – மனதில் பதியவைக்க பாரதி தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.
· இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.
· “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.
· மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.
இந்த அடிப்படையில் இந்து தர்மத்தையும் இந்திய தேசியத்தையும் மதிக்கும் எவருடனும் உரையாடவும் அவர்களை மேடையேற்றவும் பாரதி தமிழ்ச்சங்கம் தயங்கியதில்லை. அர்ஜூன் சம்பத் வருகையும் அவ்வாறான ஒன்றே. அவர் மேடையேறியது அரசியல் பேசுவதற்கல்ல. அவரது சொற்பொழிவு சைவ இலக்கியங்களில் ஆழ்ந்து தேர்ந்த ஒருவரது அருமையான ஆன்மீக சொற்பொழிவு (அது எங்கள் வலைத்தளத்தில் சில நாட்களில் தரவேற்றப்படும்). சில இந்து காழ்ப்பாளர்களுக்கு அது உவப்பில்லாமல் போனது எங்களுக்கு வியப்பளிக்கவில்லை.
2007-இல் தொடங்கிய நாள் முதல் பாரதி தமிழ்ச்சங்கம் சான் ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழர்களின் பேராதரவைப் பெற்று பெருவளர்ச்சி கண்டு வருகின்றது. இங்குள்ள தமிழர்களின் ஆதரவில் பற்பல நற்பணிகளை மேற்கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகின்றது. இந்தியாவில் நடந்த உத்தரகாண்ட் பேரிடர் துயர மீட்புக்காகவும், நேபாள நில நடுக்க இழப்பு மீட்பு உதவிகளுக்காகவும் கலை நிகழ்ச்சிகளின் மூலமும், நன்கொடைகள் மூலமும் நிதி திரட்டி பல்லாயிரம் டாலர்களை வழங்கியுள்ளது. மகாபாரதம் கும்பகோண பதிப்பு புத்தகங்களை மீண்டும் அச்சிட உறுதுணையாய் இருந்து நிதி உதவி அளித்துள்ளது. தசைச் சுருக்க நோய் உதவி ஆதவ் அமைப்பிற்காக நிதி வழங்கியுள்ளது. தமிழின் முக்கிய இலக்கியப்படைப்பாளிகளை மேடையேற்றி கௌரவித்து வருகிறது. கலிஃபோர்னியா பல்கலையில் தர்மிக் ஸ்டடிஸ் (Dharmic Studies) துறைக்காக நிதியுதவி வழங்கியுள்ளது. ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான தமிழ்க்குழந்தைகள், இளம் கலைஞர்கள் அவர்கள் கற்றுக் கொள்ளும் மரபார்ந்த இந்தியக் கலைகளை, அவற்றில் அவர்களது தேர்ச்சியை, வெளிக்கொணரும் முகமாக இலவசமாக மேடைகளை அமைத்துத் தருகின்றது. வளைகுடாப்பகுதியில் உள்ள வீடிழந்த ஏழைகளுக்கு அன்னபூர்ணா என்ற திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் உணவு வழங்கி வருகிறது.
இது போன்ற நற்பணிகளுக்கு உதவ முடிவதையே மிகப்பெரும் தவப்பயன் என்று பாரதி தமிழ்ச்சங்கம் கருதுகின்றது. அரவிந்தன் கன்னையன் என்பவரது எதிர்மறைக்கருத்து, எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் தளத்தில் வந்த்தால் மட்டுமே இந்த விளக்கம். மற்றபடி, இப்படிப்பட்ட காழ்ப்பு மனங்களின் வெறுப்பு வார்த்தைகளை பாரதி தமிழ்ச்சங்கம் நோய்க்கழிவென்று கொண்டு தாண்டிச்செல்லும்.
நன்றி.
வேணு ரங்கநாதன்
தலைவர்
பாரதி தமிழ்ச்சங்கம்