பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு. பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது. உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது.