Mahakavi Bharatiyar’s 141st Birthday Special Event

Bharati Tamil Sangam proudly presents Bharati 141 on the occasion of Maahakavi Bharati’s 141st birthday on December 10, 2022 at 4PM California Time. This is an in person event. Dr. Mira T. Sundararajan, the great granddaughter of Mahakavi and Dr. Bharathy Sankara Rajulu, Berkeley University will be joining us as special guests.

We invite you all to come and join us in person and celebrate the greatest poet of the century whose timeless works kindled the freedom movement and inspired millions. The event is entirely themed around ‘Bharati’. We encourage and invite you all to showcase your creativity, talent and dedication to Mahakavi in various forms such as singing, poems, speeches, skits and drawings.

Please register here. Please encourage your children to actively participate. If you would like to participate in more than one category, please register separately.

Rules:

  • Those registering under the category ‘Drawing’ must complete and bring their work to the event for display. Please take a video of your child while drawing and email to [email protected]
  • Those who intend to use their own poems or songs about Bharathy must email their works to [email protected] for our review
  • No offensive, objectionable, unlawful content will be allowed. Entries with such content will be rejected and performers will be removed from the event venue if indulged in such acts
  • Registrations close at 11:59PM on December 8, 2022. All entries must be submitted before the deadline to be considered for the event.
  • Space is limited. Please register today!

BATS calls upon everyone to come together and celebrate Bharathi with the highest spirits.

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதி தமிழ்ச் சங்கம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை வருகிற டிசம்பர் 10ந் தேதி, கலிஃபோர்னியா நேரம் மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பாரதியின் கொள்ளுப்பேத்தி திருமதி மீரா சுந்தர்ராஜன் மற்றும் பெர்க்லீ பல்கலைகழகத்திலிருந்து திருமதி. பாரதி சங்கர ராஜுலு அவர்கள் கலந்துகொள்கிறார்கள். அனைவரையும் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொள்ள வருக வருக என அழைக்கிறோம்
கலைமகள் குடியிருந்த பாரதி தன் எழுத்துகள் மூலமாகக் கோடிக்கணக்கான ஜனங்களின் மனங்களில் சுதந்திரத் தீயினை மூட்டினார். அவரது படைப்புகள் ‘காலா உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா’ என்று காலத்தை வென்று நிற்கின்றன. அந்த யுகபுருஷனைக் கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சியின் அனைத்து பகுதிகளும் ‘பாரதி’யைப் பற்றியதாக அமைந்திருக்கும். பாரதி தொடர்பான தலைப்புகளில் பாடல், கவிதை, பேச்சு, ஓவியம், நடனம் என்று பல்வேறு கலை வடிவங்களில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு பாரதியைப் பற்றிச் சொல்லிக்கொடுங்கள். அவர்களை உற்சாகத்துடன் பங்கெடுக்க ஊக்குவியுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

பங்கு பெற விரும்புபவர்கள் இந்தச் சுட்டிக்குச் சென்று தங்கள் விவரங்களை டிசம்பர் 8 இரவு 11:59க்குள் பதிவு செய்துகொள்ளூங்கள்.

நிகழ்ச்சியில் பங்கெடுக்க விரும்புவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்:

  • தங்கள் ஓவியங்களை நிகழ்ச்சிக்கு பதிவு செய்யும் முடிவு தேதியான டிசம்பர் 8 க்குள் முடித்து, நிகழ்ச்சியில் காட்சிப் படுத்தக் கொண்டுவாருங்கள். நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. நீங்களோ உங்கள் குழந்தைகளோ ஓவியம் வரையும் போது அதை ஓரிரு நிமிடங்கள் காணொளியாகப் பதிவுசெய்து [email protected] என்ற முகவரிக்கு அனுப்புங்கள். காணொளியின் அளவு பெரிதாக இருந்தால் Youtube, google drive போன்ற தளங்களில் பதிவேற்றி அதன் சுட்டியை அனுப்புங்கள்.
  • பாரதியைப் பற்றிச் சுயமாக கவிதை எழுத விரும்புபவர்கள், பாடல்களை எழுதிப் பாட விரும்புபவர்கள், உங்கள் படைப்புகளை பதிவு செய்யும் முடிவுத் தேதிக்குள் [email protected] அனுப்பவேண்டியது அவசியம். முன்கூட்டி அனுப்பப்படாத படைப்புகள் நிகழ்ச்சியில் அனுமதிக்க இயலாது.
  • ஆட்சேபகரமான, எதிர்மறையான, சட்டத்திற்குப் புறம்பான ஆக்கங்கள் கட்டாயமாக அனுமதிக்கப்படாது. அப்படிப்பட்ட ஆக்கங்களை அனுமதியின்றி நிகழ்ச்சியில் வெளிக்காட்டுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.
  • நிகழ்ச்சியில் பங்கு பெற பதிவு செய்ய இறுதி நாள் டிசம்பர் 8, இரவு 11:59 கலிஃபோர்னியா நேரம்.
அனைவருக்கும் அனுமதி இலவசம். தவறாது நேரில் வந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏽