கலிஃபோர்னியா வளைகுடா என்பது சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரத்தில் தொடங்கி கிழக்கே சான் ரமோன், பிளசன்டன் நகரங்கள் மற்றும் தெற்கே இருக்கும் ப்ரீமான்ட், சன்னிவேல், சான்ட கிளாரா, கூப்பர்டினோ மற்றும் சான் ஒசே நகரங்கள் உள்ளிட்ட இடத்தை குறிப்பிடுகின்றன. இது கலிஃபோர்னியாவிலே மிகவும் அழகான மற்றும் நல்ல காலநிலை (Climate) கொண்ட இடமாகும். மேலும் இந்த இடம் உலகின் தலைசிறந்த கம்ப்யுூட்டர் தொழில்நுட்பம் கொண்ட இடமாக திகழ்கிறது. ஆகவே, இயற்கையாக இங்கு கல்வியில் சிறந்து விழங்கும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.

இங்கு 1970-லே நிறைய தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள். 2010-ன் கணக்குப்படி இங்கே ஏறத்தாழ இருபதாயிரம் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழ்நாட்டைப் போல பாரம்பரிய தமிழ்க் கலைகளை மிகவும் அழகாக வளர்க்கின்றார்கள். ஓவ்வொறு சனி ஞாயிறு நாட்களில் ஏதாவது ஓரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.